வாக்குவாதத்தில் கப்பை தூக்கி போட்டு உடைத்து கத்திய ஜனனி.. வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். இலங்கை தமிழ்ப்பெண் ஜனனி மீது மக்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளது.. அவரும் விளையாட்டை அழகாக விளையாடி வருகிறார். இதுவரை க்யூட்டாக விளையாடி வந்த ஜனனி, குயின்ஸியிடம் சண்டை போட்டு, ஜனனி கோபத்தில் கையில் இருந்த கப்பை போட்டு உடைத்துள்ளார். அதன் வீடியோ செம வைரலாகி வருகிறது.
Janany vs Queency fight. Many scenes from the beginning were not shown on stream.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 3, 2022
Part 1 : Janany breaks the cup in anger.
#BiggBossTamil6 pic.twitter.com/G0wyt9VgFr
Sambavam starting point
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 4, 2022
Janani vs Queency
Oru Dress ku ivlo Problem ha🤦#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/bwmNe4iZVt