Viral Video: 'ஒரு திருநங்கை பற்றி இவ்ளோ கீழ்தரமா பேசுவீங்களா' ஷிவின் குறித்து தனலட்சுமி - ஜனனி பேசியதை கண்டித்த திருநங்கை தனுஜா.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

தற்போது, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவரும் திருநங்கை போட்டியாளரான ஷிவின் குறித்து சக போட்டியாளர்களான தனலட்சுமி- ஜனனி இருவரும் அவரை பற்றி பேசிய விஷயம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சிவின் கணேசன் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்து பின் இவர் மீண்டும் இந்தியா வந்தார்.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லை. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார்.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தனலட்சுமி- ஜனனி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, சிவினுக்கு தலையில் முடி வளருமா? வளராதா? என்று சர்ச்சைக்குரிய கருத்தை பேசி இருக்கிறார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்து, ஆத்திரம் அடைந்த திருநங்கை தனுஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

janany and dhanalakshmi speaks up bad about shivin tanuja got anger

அதில் அவர் கூறியிருப்பது, சிவினுக்கு தலையில் முடி முளைக்குமா? முளைக்காதா? என்று பெரிய டிஸ்கஷன் செய்திருந்தார்கள் ஜனனி – தனலட்சுமி. இது நிறைய திருநங்கை மனதை பாதித்திருக்கிறது. இது எவ்வளவு கீழ்த்தனமான, கேவலமான, அறிவு கெட்ட தனமான பேச்சு. உள்ளே கலருக்காக முகத்தை மாத்தினவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பேசுனீர்களா? ஒரு பாடி பில்டர் எப்ப பார்த்தாலும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார். அவரை பற்றி யோசித்தீர்களா? திருநங்கை மட்டும் என்ன ஊறுகாயா? மற்றவர்களை பேசுவது நாகரீகம் இல்லை என்று கருதுகிற நீங்க எங்க சமுதாயத்தை மட்டும் எப்படி எளிதாக உங்களால் பேச முடியுது. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Share this post