'கெட்ட வார்த்தை பாடி தான் உங்க வாழ்க்கைய நடத்தணுமா?' சூப்பர் சிங்கர் பைனலில் அனிருத் பாடலை சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன்

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், தொடருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

சூப்பர் சிங்கர், கலக்கபோவது யாரு, குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் செம பேமஸ். ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல் தொடர்கள் சின்னத்திரையில் டிஆர்பியில் இடம்பெறுவது வழக்கம்.

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக பல சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி.

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

இது ஜூனியர், சீனியர் என்று இரு நிகழ்ச்சிகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. சீனியர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை விட மழலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் சீசன் 8 நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது.

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் தகுதி பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து 2ம் இடத்தை ரிஹானாவும், 3ம் இடத்தை நேஹாவும் பெற்றனர். ஆனால், பலரும் நேஹா தான் முதல் பரிசை பெற்று இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

ஆனால், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ரிஹானா அனிருத்தின் குத்துப்பாடல்களை பாடி இருந்தார். அப்படி இவர் வேலைக்காரன் படத்தில் பிரபலமான ‘கருத்தவெல்லாம் கலீஜாம்’ பாடலை பாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில், இந்த பாடலில் இடம்பெற்ற கெட்ட வார்த்தையை எப்படி ஒரு குழந்தையை பாட வைக்கலாம் என்று ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு இருக்கிறார்.

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘தற்செயலாக TV பார்த்தேன். Vijay TV Super Singer Junior FINALS LIVE போய்க்கொண்டிருக்கிறது. சுமார் 8 வயது பெண் குழந்தை ‘கருத்தவன்ல்லாம் பாட்டை முழு ஈடுபாட்டுடன் பாடிக்கொண்டிருக்கிறது.

பாடலின் இடையில் வருகிற ‘தக்காளி’ என்கிற வார்த்தையை அந்தப் பாடகரைப் போலவே அழுத்தமாகச் சத்தமிட்டுச் சொல்கிறது கள்ளமறியா அந்தப் பிஞ்சு உதடுகள். எனக்கு ‘திக்’கென்கிறது. அது ஒரு கேவலமான கெட்ட வார்த்தையின் இணைச்சொல் என்பது ஆண்கள் எல்லோருக்கும் தெரியும்.

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

அந்தச் சொல்லைப் பாடினால் ஊரு திட்டும், சென்சார் பிரச்சனை வரும். அதனால் அதே போலவே ஒலிக்கிற இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்கிற உயரிய சிந்தனையுடைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், மகிழ்கிற நடிகரின் சமூகப் பங்களிப்பு இது.

இது ஒரு புறம்! ஆனால், இந்தப் பாடலையும், அந்தக் குறிப்பிட்டச் சொல்லையும் அந்தக் குழந்தைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லிக்கொடுத்த பெற்றோரையும், இசை ஆசிரியரையும், நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினரையும் தமிழ்ச் சமூகம் காலத்துக்கும் வாழ்த்த வேண்டும்!

James vasanth angry on super singer finale song sung by 8 year old girl

கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆண்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு மட்டும் என்பது போன்ற எச்சரிக்கையுடன் பெரியவர்களுக்கு அதற்குப் பிறகு அது பயனாளரின் பொறுப்பு! இப்படி குழந்தைகளும் கேட்கிற, பாடுகிற வெகுஜன ஊடகமான சினிமாப் பாடல்களுக்குள் நஞ்சை இடைச்சொருகல் செய்து ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் களங்கப்படுத்தாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Share this post