வாரிசு படத்தை தொடர்ந்து இணையத்தில் பரவும் ஜெயிலர் ஷூட்டிங் போட்டோஸ்.. அப்செட்டில் படக்குழு !
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் ஜெயிலர் திரைப்படம் மீது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
ஜெயிலர் படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாக, சிவகார்த்திகேயன் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அப்டேட்கள் வெளியானது.
படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியானது. அதன்படி, ஜெயிலர் படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், அதனால் தான் ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் காஸ்ட் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
அதன்படி, நடிகை ரம்யா கிருஷ்ணன், காமெடி நடிகர் யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன், மற்றும் தரமணி நடிகர் வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்று கூறப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எண்ணூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் ஒன்று லீக் ஆகி உள்ளது. இதனால் ஜெயிலர் படக்குழு கடும் அப்செட். விஜய் நடிக்கும் வாரிசு படத்துக்கு வந்த அதே நிலைமை தற்போது ஜெயிலர் படத்துக்கும் வந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.