'ஜெய் பீம்' படத்திற்கு 2 சர்வதேச விருது !

சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம், உலக திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.
பல்வேறு விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், சில விருதுகளும் இப்படத்துக்கும் நடிகர்-நடிகைகளுக்கும் கிடைத்தது.
தற்போது, இப்படத்திற்கு பெரும் அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் நடைபெற்ற பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை லிஜோ மொலிற்கும், ஒளிப்பதிவாளர் கதிர்ற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் கிடைத்தது. இந்த தகவல் தமிழ் திரையுலகில் தற்போது கொண்டாட்டமாக மாறியுள்ளது.
Share this post