சூர்யா நடிப்பில் ஜெய் பீம் 2ம் பாகம்? ஞானவேல் இயக்குனர் கொடுத்த தரமான அப்டேட்
சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம், உலக திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.
தீபாவளிக்கு ரிலீசான இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பு கிடைத்தது. பல்வேறு விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், சில விருதுகளும் இப்படத்துக்கும் நடிகர்-நடிகைகளுக்கும் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை லிஜோ மோலிற்கும், ஒளிப்பதிவாளர் கதிர்ற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் கிடைத்தது.
1993ம் ஆண்டு விழுப்புரத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இதில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட பழங்குடியின இளைஞரின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்காக போராடும் வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளை வென்று குவித்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்பது குறித்து கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் த.செ.ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.
அவரிடம் சூர்யாவின் சிங்கம் படத்தை போல் ஜெய் பீம் படமும் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஞானவேல், ஜெய்பீம் படக்கதையை போல் நீதிபதி சந்துரு ஆஜரான வழக்குகள் நிறைய இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக ஜெய்பீம் 2ம் பாகமாக எடுப்போம். சூர்யாவும் அதில் நடிப்பார்” என இயக்குனர் ஞானவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#JaiBhim2 will definitely happen 🔥 pic.twitter.com/qDrBLhCvJ0
— SFC Athreya Guyzzzz TBM (@Bijin65880688) November 29, 2022