இனி சண்டையிட எனக்கு சக்தி இல்லை .. சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு வைரல்..!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் மகளிர் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் விக்னேஷ் போகத் கலந்து கொண்டார். சிறப்பாக விளையாடிய இவர் இறுதிப் போட்டிக்கு தகுதியானர். இவர் 100 கிராம் கூடுதலாக இருந்த நிலையில், ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, பேசிய விக்னேஷ் போகத் தாயே என்னை மன்னித்து விடுங்கள். மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது. நான் தோல்வி அடைந்து விட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் முறிந்து போய்விட்டது. இனி சண்டையிட எனக்கு சக்தி இல்லை என்று விக்னேஷ் போகத் சோகமான பதிவை பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகை சமந்தா விக்னேஷ் போகத்தின் பதிவை பகிர்ந்து இதயம் நொறுங்கிய இமோஜை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Share this post