ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் இந்தியன் 2.. இதுவரை இத்தனை கோடியா?..
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் கமல் ஹாசன் பெண் வேடமிட்டு ஒரு ரோலில் நடிக்கிறாராம். அந்த ரோல் படத்தின் கதைக்கு மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கமல் ஏற்கனவே அவ்வை ஷண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் லேடி கெட்டப்பில் நடித்திருந்தார். அந்த படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. எனவே இந்தியன் 2 படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும். சங்கர் தரமான சம்பவம் செய்திருப்பார் என யூகிக்கமுடிகிறது. எனவே படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார். இந்தியன் 2 மட்டுமின்றி இந்தியன் 3 வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அனிருத் இசையில் இந்தியன் 2 படத்தில் இருந்து முதல் பாடல் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. பா. விஜய் எழுதிய பாரா என தொடங்கும் இந்த பாடலை அனிருத் சுருதிஹா சமுத்திரலா இணைந்து பாடியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தான் இப் படத்திலிருந்து இப்படத்திலிருந்து ட்ரைலர் வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் கமல் ஹாசனின் கடின உழைப்பு ட்ரைலரில் இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்றால், திரையில் கண்டிப்பாக பட்டையை கிளப்பி இருப்பார் என ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டும் உலக அளவில் ரூ. 2.25 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும், வட அமெரிக்காவில் ரூ. 1.65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.