அந்த விஷயத்தில் தெலுங்கு தான் Best…. மீண்டும் கோலிவுட்டை கொச்சைப்படுத்திய பிரபல நடிகை !

in-that-case-tollywood-is-the-best-famous-actress-defamed-kollywood-again

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக 2000 காலகட்டத்தின் இடைப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சங்கீதா. இவரது நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படம் இன்றளவு மிகவும் ஃபேவரட்டான பலரது திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது. பிதாமகன் திரைப்படத்தில் நடிகை சங்கீதா விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் அவர்களின் நடிப்பு மிகப்பெரிய அளவில் அப்போதே பேசப்பட்டது. தொடர்ந்து உயிர், தனம் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சங்கீதா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் சில திரைப்பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகை சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டர் உடன் பல விஷயங்களை குறித்து பேசினார்.

அப்போது உனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்குமா? தமிழ் சினிமா ரொம்ப பிடிக்குமா? என கேள்வி கேட்டதற்கு நிச்சயம் எனக்கு தெலுங்கு சினிமா தான் பிடிக்கும். தமிழ் சினிமாவில் மரியாதையே கொடுக்க மாட்டாங்க. செய்ற வேலைக்கு ஒழுங்கா பேமென்ட் கொடுக்க மாட்டாங்க.

in-that-case-tollywood-is-the-best-famous-actress-defamed-kollywood-again

அவங்களாகவே என்னோட சம்பளத்தை டிசைட் பண்ணிடுவாங்க. அதனால எனக்கு இப்போ வரைக்கும் மிகுந்த மரியாதை கொடுக்கும் ஒரே இண்டஸ்ட்ரி தெலுங்கு இண்டஸ்ட்ரி தான். எனக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க தான் மிகவும் பிடிக்கும் என மிகவும் ஓப்பனாக ஆக தெரிவித்து இருந்தார் நடிகை சங்கீதா.

இந்த விஷயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை. சாந்தி வில்லியம்ஸிடம் இது குறித்து கேட்டதற்கு…. ஆம் நிச்சயமா சங்கீதா சொல்வதில் 100% உண்மைதான் தெலுங்கு சினிமாவில் மிகுந்த மரியாதை கொடுப்பாங்க. அவங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவரும் மரியாதை இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் அது போன்று இல்லை என அவர் உண்மையை உரக்க கூறி இருக்கிறார். இதனால் மீண்டும் கோலிவுட் சினிமா சர்ச்சைகளை சந்தித்துள்ளது.

https://www.youtube.com/shorts/t_u5Xux4NqY
Share this post