அவர் மேல எந்த தப்பும் இல்லை.. சிவகார்த்திகேயன் என்கிட்ட..வெளிப்படையாக பேசிய இமான் மனைவி..!
இசையமைப்பாளர் டி இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கூட்டணியில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர்களுக்கிடையேயான விரிசலை பற்றி பேசிய இமான், இந்த வாழ்நாளில் சிவகார்த்திகேயனுடன் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்று கூறினார். மேலும், பிரச்சினை என்ன என்பதை விளக்காமல், சிவகார்த்திகேயன் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் தனக்கு துரோகம் செய்ததாக இமான் வெளிப்படுத்தினார்.
சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், இசையமைப்பாளர் இமான் பல சார்ட்பஸ்டர் ஹிட்களை கொடுத்து இருந்தார். அவை இன்னும் அனைவரின் பிளேலிஸ்ட்களிலும் இருந்து வருகின்றன. இருப்பினும், அவர்கள் இணைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில், வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயனுடன் தான் பேசவில்லை என்பதை இமான் ஒப்புக்கொண்டார்.
மேலும், “இந்த ஜென்மத்தில் அவருடன் ஒத்துழைப்பது கடினம். இது தனிப்பட்ட காரணம் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். ஒருவேளை, அவர் ஒரு நடிகராக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால், ஒன்றாக வேலை செய்யயலாம்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர். நானும் இமானும் பிரியக்கூடாது என்று சமாதானம் பேசி பஞ்சாயத்து பண்ணி வைத்தார். இமானோட விவகாரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. அவர் நியாயத்தின் பக்கம் நின்றார். சிவகார்த்திகேயன் மேல் எந்த தவறும் இல்லை என்று இமானின் முதல் மனைவி மோனிகா தெரிவித்துள்ளார்.