தென்னிந்திய சினிமாவில் நடிகை இலியானா நடிக்க தடை..? வெளியான ஷாக்கிங் காரணம்..!
2006ம் ஆண்டு கேடி என்னும் தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனைத் தொடர்ந்து, தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
2012ம் ஆண்டு, ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜயுடன் ஜோடியாக சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கிய இவர், ஒல்லி பெல்லி இடுப்பை வைத்து தென்னிந்திய திரையுலகில் வலம் வர தொடங்கினார்.
தமிழில் அதிக திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும், தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் பான் இந்தியா லெவல் பேமஸ் அம்மணி. இலியானா இந்தியில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், அவருக்கு கு பாலிவுட்டில் அங்கீகாரம் குறைவாகத்தான் இருக்கிறது. இதனால் இலியானா தென்னிந்திய படங்களில் நடிக்க முடிவு இலியானா கூறப்பட்டது.
இப்படி இருக்கும் நிலையில் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் இலியானாவை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து முன்பணமும் கொடுத்திருக்கிறார். ஆனால், இலியானா கால்ஷீட்டும் கொடுக்காமல், தயாரிப்பாளர் கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் இலியானா மீது புகார் கொடுத்து முறையிட்டு இருக்கிறார்.
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நான்கு மொழி திரைப்படங்களிலும் இலியானாவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத தடையை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது தகவல் இலியானா தரப்பில் எந்த ஒரு தகவலுமே கூறவில்லை. இந்த செய்தி வந்து இருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.