காசுக்காக 'அந்த' விஷயத்தை பண்ணது உண்மைதான்.. வெளிப்படையாக பேசிய பிரியா ஆனந்த்..!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருந்தவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு, பிரசாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் அந்தகன் படத்தில் முதன்மை தோற்றத்தில் நடித்துள்ளார்.
அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகள் படு பிஸியாக நடைபெற்று வருகிறது. இதில், பிரியா ஆனந்தம் கலந்து கொண்டு வருகிறார். அவருக்கு பிடித்த ஃபேவரைட் ஹீரோ யார் என்றால், கனடாவில் புனித் ராஜ்குமார் என்றும், தமிழில் மிர்ச்சி சிவா என்றும் கூறியிருந்தார். இவர் புனித் ராஜ்குமார் கடைசி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காசுக்காக வேறு வேலை ஏதாவது பார்த்தீர்களா என்ற கேள்வி கேட்டதற்கு காசுக்காக ஒரு படத்தில் நடித்தேன். அந்த நேரத்தில், வீட்டில் லேன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அதனால், கதை ஏதும் கேட்காமல் அந்த படத்தில் நடித்தேன் என்று பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.