இளம் தனுஷிற்கு.. ஹாலிவுட் நடிகர் தனுஷ் கொடுத்த அட்வைஸ்.. வைரலாகும் வீடியோ

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன், என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். தற்போது, தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள தி க்ரே மேன் படம் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

இப்படத்தில் எப்படி கமிட்டாகி நடித்து முடித்தேன் என்பது குறித்து தனக்கே தெரியவில்லை என்று அவர் புரமோஷனின் போது தெரிவித்துள்ளார். படத்தின் புரோமோஷன் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருப்பதால் தவறாது எல்லா இடங்களுக்கும் தனுஷ் சென்று புரோமோஷனில் கலந்து கொண்டு உரையாடி வருகிறார்.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

மேலும் நேற்று நடந்த புரோமோஷனில் தன் இரு மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவை தன்னுடன் அழைத்து சென்றிருந்தார் தனுஷ். புகைப்படங்கள் எடுக்கும் போது மகன்களையும் அழைத்து பக்கத்தில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

ஏற்கனவே இந்த படத்தின் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, கோட் சூட்டில் செம்ம கெத்தாக மகன்களுடன் மாஸ் காட்டிய தனுஷ், மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அனைவருமே கோட் - சூட்டு மற்றும் நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்த போதிலும், தனுஷ் கதர் வேஷ்டி சட்டையில் வந்து மிரள வைத்தார்.

Hollywood hero dhanush advice to young dhanush video getting viral on social media

இப்படி world famous ஆக மாறி கோலிவுட் டூ ஹாலிவுட் சென்ற தனுஷ், தற்போது பேசியுள்ள ஒரு வீடியோ செம வைரலாகி வருகிறது. The Gray Man படத்தின் ப்ரோமோஷனுக்காக தனுஷ் பல இடங்களுக்கு சென்று பேட்டியளித்திருந்தார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘தற்போதைய தனுஷ் இளம் தனுஷிற்கு என்ன அட்வைஸ் கொடுப்பார்’ என கேள்வி கேட்கப்பட்ட போது, அதற்கு பதிலளித்த தனுஷ் “உன் உருவத்தைப் பார்த்து யாராவது கேலி செய்தால் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு கவலைபட வேண்டாம், ஒரு நாள் உன்னை ஒரு ஹாலிவுட் ஹீரோ Sexy Tamil Friend என்று அழைப்பார்” என பதிலளித்துள்ளார்.

Share this post