வருங்கால மனைவியின் போட்டோவை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்.. அறிவிப்புடன் வெளியான திருமண தேதி !
2010ம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கியவர் ஹரிஷ் கல்யாண். அமலா பால் ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகுந்த சர்ச்சைக்கு வழிவகைக்கும் வகையில் அமைந்திருந்ததால் இப்படம் பெரிதாக ஓடவில்லை.
இதனைத் தொடர்ந்து, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தா மாமா போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால், இவருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
2014ம் ஆண்டு, தாணு குமார் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்து வெளியான பொறியாளன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கொஞ்சம் பிரபலமாக அறியப்பட்டார். பின்னர், வில் அம்பு, தெலுங்கில் காதலி ஏன்னும் திரைப்படம் போன்றவற்றில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
2017ம் ஆண்டு, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கிடைக்காத வரவேற்பும் பிரபலமும் ஹரிஷ் கல்யாணுக்கு கிடைத்தது. இதன் பின்னர், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுஷு ராசி நேயர்களே, தாராளபிரபு, ஓ மணப்பெண்ணே, கசடதபற போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அடுத்தடுத்து சில திரைப்படஙகளில் கமிட் ஆகி வரும் ஹரிஷ் கல்யாண், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சசி இயக்கத்தில் உருவாகி வரும் நூறு கோடி வானவில், பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு உலா வருகிறது. அவரது பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. அவரது திருமணம் அரேஞ் மேரேஜாக தான் இருக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், முதல் முறையாக தனது காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து இருக்கும் அழகிய புகைப்படத்தை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டு தனது காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தான் உண்மையிலேயே திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறி தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண். அவர் பெயர் நர்மதா உதயகுமார் என்றும், ஐடி கம்பெனியில் பணியாற்றி வருவதாகவும், இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் வருகிற அக்டோபர் 28ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
With all my heart, for all my life ❤️
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022
Im extremely happy to introduce 𝐍𝐚𝐫𝐦𝐚𝐝𝐚 𝐔𝐝𝐚𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫, my wife-to-be. Love you to bits 🤗❤️
With God’s blessings, as we begin our forever, we seek double the love from you all, now & always pic.twitter.com/yNeHusULfY