விவாகரத்து முடிவை அறிவித்த ஹர்திக் பாண்டியா - நடாஷா.. இந்த தமிழ் படத்துல நடிச்சிருக்காங்களா?..

hardik-pandya-and-natasa-announce-divorce

பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடமாடி பிரபலமானவர்தான் நடாஷா. இவர் தமிழிலும், அரிமா நம்பி என்ற படத்தில் நானும் உன்னில் பாதி என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். மேலும், இந்தி பிக் பாஸ் சோவிலும் போட்டியாளராக நடாஷா கலந்து கொண்டிருந்தார்.

hardik-pandya-and-natasa-announce-divorce

முன்னதாக, இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியானது.

hardik-pandya-and-natasa-announce-divorce

மேலும், உலககோப்பையை வென்ற போது கிடைத்த வரவேற்பு என ஹர்திக் பாண்டியா கேரியரில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது விவாகரத்தை அதிகாரபூர்வமாக இருவரும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், நடாஷா நேற்று அவரது சொந்த நாடான செரிபியாவுக்கு மகனை கூட்டி சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post