நயன் விட அழகா இருக்கீங்க.. விக்கியின் கமெண்டால் மெர்சலான நடிகை.. நடிகையின் பதில் ட்வீட் வைரல் !
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் நயன்தாரா சிகப்பு சேலையில் பல கோடி மதிப்பிலான ஆபரண நகைகளை அணிந்து மிரளவைத்தார்.
அவரின் ஆடை மட்டுமே பல லட்சம் மதிப்பு என சொல்லப்பட்டது. நயன்தாராவின் திருமண புகைப்படம் வெளியாகி போது, அதை போல் அவரின் ரசிகர்கள் மேக்கப் செய்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரத்தி கணேஷ் நயன்தாரா போட்டிருந்த சிகப்பு சேலையை போல் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ்படேசனை விட ரியாலிட்டி சூப்பராக இருக்கிறது என்று கருத்துக்களை கூறி வந்தனர்.
ஆரத்தியின் இந்த பதிவு வைரல் ஆனதை அடுத்து, நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ஆர்த்தியின் போட்டோஷூட்க்கு ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஆர்த்தி’ என கமெண்ட் செய்திருந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த பதிவுக்கு நடிகை ஆர்த்தி நன்றி தெரிவித்து பதில் செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி விக்னேஷ் சிவன் பிரதர். தங்கள் கூறியது போல நானும் என்னை அழகியாகவே பார்க்கிறேன். ஆனால் உண்மையில் தங்களின் பேரழகி மனைவி (தங்கமே). அவர்களைப்போல உடை அலங்காரத்தை நான் செய்து கொண்டதால் தான் இன்னும் மிளிர்கிறேன் என நம்புகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.