ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள போகும் மாப்பிள்ளை இவர்தான்! திருமண தேதி, இடம் குறித்து வெளியான தகவல்!

hansika soon to get marry her friend cum business partner and photo getting viral

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.

hansika soon to get marry her friend cum business partner and photo getting viral

ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

hansika soon to get marry her friend cum business partner and photo getting viral

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.

hansika soon to get marry her friend cum business partner and photo getting viral

சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. இந்நிலையில், இவரது திருமணம் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

hansika soon to get marry her friend cum business partner and photo getting viral

சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் திருமணம் குறித்த செய்தி தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஹன்சிகா ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

hansika soon to get marry her friend cum business partner and photo getting viral

ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர்கள் இருவருமே சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட்டையும் நடத்தி வந்திருக்கிறார்கள். ஜெய்ப்பூரில் உள்ள அரண்மை ஒன்றில் டிசம்பர் 2 முதல் 4ம் தேதி வரை இவர்களுடைய திருமண விழா நடைபெற இருக்கிறது. இதை பற்றி ஹன்சிகாவே விரைவில் முறையாக வெளியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது. மேலும், ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள போகும் நபரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

hansika soon to get marry her friend cum business partner and photo getting viral

Share this post