Viral Pic: திருமணம் முடிந்த முதல் நாளே மாப்பிளை வீட்டாரை வாயடைக்க வைத்த ஹன்சிகா.. இதெல்லாம் செய்வாங்களா?
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சொஹைல் கதூரியாவுக்கு, ரிங்கி என்ற பெண்ணுடன் 2016ம் ஆண்டு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. சொஹைலின் முன்னாள் மனைவி ரிங்கி ஹன்சிகாவின் தோழி என்று சொல்லப்படுகிறது. ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் சொஹைல். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தான் ஹன்சிகாவுக்கும், சொஹைலுக்கும் இடையே பழக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் பாரம்பரிய முறைப்படி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிந்தைய Pehli Rasoi சடங்கில் ஹன்சிகா மோத்வானி, மாப்பிள்ளை வீட்டாருக்கு அல்வா சமைத்து பரிமாறியுள்ளார். Pehli Rasoi, என்பது திருமணத்திற்கு பிறகு மணப்பெண், மணமகன் வீட்டாருக்கு காலை உணவு சமைத்து பரிமாற வேண்டும். இந்த சடங்கு வட இந்தியாவில் மிகப் பிரபலமான ஒன்று.