திருமணம் குறித்த விமர்சனங்கள்.. வேதனையை பகிர்ந்த ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறினார்.
சமீபத்தில், ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சொஹைல் கதூரியாவுக்கு, ரிங்கி என்ற பெண்ணுடன் 2016ம் ஆண்டு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது.
ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் சொஹைல். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தான் ஹன்சிகாவுக்கும், சொஹைலுக்கும் இடையே பழக்கம் என்று தகவல் வெளியானது.
இவர்களின் திருமண வீடியோவை ஹாட் ஸ்டாரில் ஒரு டிராமா போலவே எடுத்து வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அதன்படி ஹன்சிகாவின் இந்த திருமண வீடியோ வருகிற பிப்ரவரி 10ம் தேதி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக் உள்ளது. தற்போது இந்த திருமண வீடியோவின் ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதில் ஹன்சிகா கொஞ்சம் அழுது எமோஷனலாக உள்ளார்.