நடிகை ஹன்சிகாவிற்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் ? எங்க ? எப்போ ? வெளியான முழு விவரம் !
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. இந்நிலையில், இவரது திருமணம் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஹன்சிகா ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகன் பிரபல தொழிலதிபர் ஒருவரை தான் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் திருமணம் குறித்த செய்தி தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள அரண்மை ஒன்றில் வருகிற டிசம்பர் மாதம் ஹன்சிகாவிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக வும், அதற்கான ஏற்பாடுகளை அவருடைய குடும்பத்தினர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.