துர்கா மாதா பூஜையுடன் துவங்கிய ஹன்சிகாவின் திருமண சடங்குகள்.. வைரல் வீடியோ!

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. இந்நிலையில், சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் திருமணம் குறித்த செய்தி தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்துகொள்ள தயாராகி உள்ளனர். தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டார்.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சொஹைல் கதூரியாவுக்கு, ரிங்கி என்ற பெண்ணுடன் 2016ம் ஆண்டு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. கோவாவில் நடந்த சொஹைல், ரிங்கியின் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவும் வெளியானது. சொஹைலின் முன்னாள் மனைவி ரிங்கி ஹன்சிகாவின் தோழி என்று சொல்லப்படுகிறது. ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் சொஹைல். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தான் ஹன்சிகாவுக்கும், சொஹைலுக்கும் இடையே பழக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமானதையே எங்களால் இன்னும் தாங்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டாம் தாரமாக போகிறாரே இந்த ஹன்சிகா. அவருக்கு இதெல்லாம் தேவையா என தீவிர ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. அன்று காலையே ஹல்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மெஹந்தி மற்றும் சங்கீத் ஆகிய நிகழ்ச்சிகள் டிசம்பர் 3ம் தேதி நடக்கவிருக்கிறது. டிசம்பர் 2ம் தேதி சுஃபி நைட்டாம். திருமணம் முடிந்த பிறகு டிசம்பர் 4ம் தேதி மாலை விருந்தினருக்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். போலோ மேட்ச், கசினோ தீம் பார்ட்டியாம்.

hansika marriage rituals begun with durga matha pooja video getting viral

ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூரில் நடக்கிறது. ஆனால் தன் திருமண சடங்குகள் மும்பையில் இருந்து துவங்க வேண்டும் என்று விரும்பினாராம். இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு துர்கா மாதாவுக்கு விளக்கேற்றி வைக்கும் சடங்கு நடந்தது. அதற்காக சிவப்பு நிற சேலையில் மிகவும் அழகாக கிளம்பினார் ஹன்சிகா. அவர் சிரித்த முகமாக காரில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

Share this post