"துணிவு படத்தோட கதையே இதுதான்.. ட்ரைலரை மறுபடியும் பாருங்க.." H. வினோத் பேட்டி வைரல்
தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்கள் நல்ல விமர்சனம் மற்றும் வசூல் பெற்ற நிலையில், துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களின் புரோமோஷன் பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துணிவு’ படத்தின், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூபில் வீடியோ தாறுமாறு சாதனையும் செய்து வருகிறது. வரும் பொங்கல் ஜனவரி 11ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் அதிக மோசமான வார்த்தைகள் இருக்கிறது என்று சென்சார் குழு நிறைய இடத்தை கட் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இயக்குனர் ஹெச். வினோத் & மஞ்சு வாரியர் கலைஞர் தொலைக்காட்சி சேனலுக்கு துணிவு படம் குறித்து பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் வலிமை படத்தின் அப்டேட் டிரெண்ட் ஆனது குறித்து பேசிய இயக்குனர் ஹெச். வினோத், “பட ரிலீஸ்க்கு 60 நாள் முன்னாடி அப்டேட் கொடுத்தால் ரிலீஸ்க்கு சரியாக இருக்கும்.
வலிமை படத்தின் அப்டேட் கேட்டதால் படத்தின் காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக கட் பண்ணி போட்ட பின்னர், தியேட்டரில் பார்க்கும் போது காட்சிகள் குறைவாக இருந்தது. கணிக்க கூடிய வகையில் படம் அமைந்துவிடும்!” என வினோத் கூறினார். அப்போது, “அதுனால தான் துணிவு டிரெய்லர்ல எதுவுமே வெளியிடலயா?” என தொகுப்பாளர் மீண்டும் கேள்வி கேட்க, இயக்குனர் H. வினோத், “துணிவு டிரெய்லர்லயே அந்த படத்தோட கதை இருக்கு.மறுபடியும் பாருங்க. இதை பத்தி தான் கதைன்னு தெரியும் “ என வினோத் பதில் அளித்தார்.