விஜய் ரசிகரின் தற்கொலை அறிவிப்பு.. உடனடியாக உதவி செய்து காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்.. வைரல் பதிவு !
2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு டார்லிங் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தற்போது, பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகன். ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு ஒரு தங்கை உண்டு. காபே ரணசிங்கம், பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பாடி வந்த இவர், வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து, மதராசப்பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், காக்கா முட்டை, ஆடுகளம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, அசுரன், சூரரை போற்று போன்ற பல வெற்றி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும், திரிஷா இல்லனா நயன்தாரா, செம்ம, நாச்சியார், குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம், பேச்லர் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது, பல திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஜிவி பிரகாஷ், விஜய் ரசிகர் ஒருவருக்கு பணம் கொடுத்து உதவி செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது. இது குறித்த screenshot செம வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Great Work 😍😍 Super @gvprakash sir Intha mari Social media La Ipadi Help Pannurathu Romba Super erukku sir Wow i never Expected u do this sir really Appreciate u sir. And @HepsibhaVijay Akka 😊😊 Romba Happy akka Really negga vera Level #GVPrakash #ThalapathyVijay pic.twitter.com/fDpzPz1KV7
— × Nesamani Memes × (@Memes__Nesamani) July 18, 2022
@gvprakash
— Mersal kumar (@Mersal_kumarsk) July 19, 2022
ஹாய் சார் ஒரு சிறிய உதவி சார்
நான் ஒரு ஏழை குடும்பத்து பையன் சார் எங்க அப்பா வயலுக்கு மருந்து அடிக்க மருந்து மிசின் வாங்க சிறிய தொகை தேவைப்பாடுகிறது சார் உங்களால் முடிந்த சிறிய தொகை கிடைக்குமா சார் 🙏🏻🌾🙏🏻#pleaseHelpmesir🙏🏻🌾 pic.twitter.com/cdGIEofVTp