யுவன் tuneஐ காபி அடித்த ஜிவி.. வைரலாகும் வீடியோ.. கடுப்பாகி ஜிவி செய்த செயல் வைரல் !
2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு டார்லிங் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தற்போது, பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகன். ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு ஒரு தங்கை உண்டு. காபே ரணசிங்கம், பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பாடி வந்த இவர், வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து, மதராசப்பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், காக்கா முட்டை, ஆடுகளம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, அசுரன், சூரரை போற்று போன்ற பல வெற்றி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும், திரிஷா இல்லனா நயன்தாரா, செம்ம, நாச்சியார், குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம், பேச்லர் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது, பல திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தை பிளாக் செய்துள்ள ஸ்க்ரீன்ஷாட் செம வைரலாகி வருகிறது. நெட்டிசன் ஒருவர் இசையமைப்பாளர்கள் ஒரே மெட்டை எப்படி காப்பியடித்து மாற்றியுள்ளனர் எனபதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், வடிவேலுவின் காமெடியை எடுத்து ஏ ஆர் ரகுமான் பாடிய காதல் தினம் படத்தின் இசையையும், ஹாரிஸ் ஜெயராஜ் பாடிய மஜ்னு படத்தின் பாடலையும், யுவன் சங்கர் ராஜா பாடிய ராம் படத்தின் பாடலையும், ஜிவி பிரகாஷ் பாடிய ஆடுகளம் படத்தின் பாடலையும் ஒன்றாக இணைத்து ஒரு மீம் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது ரஹ்மான் போட்ட டுயூனை தான் மற்ற அனைவரும் காபி அடித்தது போல அந்த வீடியோ அமைந்து இருக்கிறது. இது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது குறித்து பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்நிலையில், இதைப் பார்த்த ஜிவி பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த நெட்டிசனை பிளாக் செய்து இருந்தார். இந்த பதிவு செம வைரல் ஆகி வருகிறது.
Ani bro enters the chat 😂 pic.twitter.com/Usjj3ybXpH
— Karthik Swaminathan (@worldofkarthic) May 31, 2022