மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ரசிகர்கள் செம ஹேப்பி..!

gv-prakash-and-saindhavi-have-sung-a-song-in-sir-here-are-the-details- 070524

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

gv-prakash-and-saindhavi-have-sung-a-song-in-sir-here-are-the-details- 070524

இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

இந்நிலையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ளார். சார் என்ற படத்தின் சிங்கிள் பாடலை நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இசை அமைப்பாளர் சித்து இப்படத்திற்கு இசையமைக்க பனங்கருக்கா என்ற சிங்கிள் பாடலை ஜிவி பிரகாஷ் - சைந்தவி இணைந்து பாடி இருக்கிறார்கள். விவேகா எழுதிய இந்த பாடலை ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பே பாடலை ஒளிப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post