பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜி.பி.முத்து? காட்டுத்தீ போல பரவும் அதிர்ச்சி வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. இருப்பினும், ஜி.பி.முத்து அவர்களுக்கு நிறைய பேன்ஸ் & பாலோயர்ஸ் கூடியுள்ளனர். டிக் டாக், யூடியூப்-ன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. தனக்கென இணைய தளங்களில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் ஜி.பி.முத்து.
தற்போது, இந்த பிக்பாஸ் சீசனில் மக்களை பெரியளவில் கவர்ந்த போட்டியாளராகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல விரும்பி சோகமாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவர் பிக்பாஸ் வீட்டில் சந்தோஷமாக பார்க்க முடியவில்லை. மேலும் அவர் சகோதரர் ஆனந்தை பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஒரு வாரம் மிகவும் ஆக்ட்டிவாக இருந்த ஜிபி முத்து, இந்த வாரம் தலைவர் என்கிற போஸ்டிற்கு வந்து விட்டாலும் கூட, அவருடைய குடும்பம் மற்றும் குழந்தைகளை மிகவும் மிஸ் செய்வது அவரது பேச்சின் மூலமே தெரிகிறது. இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ள ஜி.பி. முத்து பிக் பாஸ் இடம் கூறிவிட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இது உங்களுடைய முடிவு என்றும், வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வாருங்கள் என்றும் பிக் பாஸ் கூறியுள்ளார். ஆனால், இவை அனைத்தும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை தத்ரூபமாக உண்மையாகவே ஜி.பி. முத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பது போல் எடிட் செய்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.
விடை பெற்றார் தலைவர் 🙏#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 pic.twitter.com/JxvJV2NYSt
— RamSimbu Talks (@RamSimbuTalks) October 22, 2022