திடீரென கைது செய்யப்பட்ட ஜிபி முத்து? இணையத்தில் வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜிபி முத்து, ஒரு மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர். விளையாட்டு தனமாக தனக்கு கிடைக்கும் நேரமெல்லாம் டிக்டாக்கில் வீடியோ போட தொடங்கவே அதுவே இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி, இவர் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. தொடர்ந்து டிக்டாக்கில் பட வசனங்கள் பேசியும், நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.
இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் திடீரென டிக்டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.
அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி, அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து வரவேற்பினை பெற்று வந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என மிகவும் பிசியாக மாறிவிட்டார்.
இவரது பிரபலத்தின் மூலம் இவருக்கு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து போட்டியாளராக பங்கேற்றார். பின்னர், ஒருவாரத்தில் குழந்தைகள் நினைப்பாக இருப்பதாக கூறி வெளியே சென்றார். இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதும் இவர் தான் முதல் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் நினைத்தனர். ரசிகர்கள் ஆதரவையும் நிறைய பெற்றார். இருப்பினும், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே வந்தார்.
இந்நிலையில், தற்போது இவர் கைது செய்யப்பட்டதை போல புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. இதனை விசாரித்த பொழுது பரோல் படத்திற்காக ப்ரோமோஷனில் ஜிபி முத்து கைது செய்யப்படுவது போல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வதந்திகள் கிளம்பியுள்ளது தெரியவந்துள்ளது.