'என் பொண்ணா இருந்தா செருப்பால அடிப்பேன்'.. சர்ச்சையில் சிக்கிய ஜிபி முத்து.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜிபி முத்து. நாளுக்கு நாள் இவருக்கான சப்போர்ட் பெருகி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சம்பவத்துக்கு பின் நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் ஜிபி முத்து.
நேற்று நள்ளிரவு அசல் கோளார் மற்றும் தனலட்சுமி இடையே சண்டை நடைபெற்றது. அசல் தன்னை உருவகேலி செய்ததை தைரியமாக எதிர்த்து நின்று தட்டிக்கேட்டார் தனலட்சுமி. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அசீம், தனலட்சுமியை வீட்டுக்கு வெளியே அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த விக்ரமன் தனலட்சுமியிடம் என்ன பிரச்சனை.. ஏன் அழுகுற என கேட்டார். ஆனால் அசீம், தனலட்சுமியை விக்ரமனுடன் பேசவிடாமல் வெளியே அழைத்து சென்றார்.
இதனால் விக்ரமன் கோபமடைந்து அசீம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இடையே வந்த ஜிபி முத்து, நீங்க அதைப்பற்றி பேசக்கூடாது என சொல்லி விக்ரமனை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை பேச விடாமல் தடுத்த ஜிபி முத்துவிடம் கடிந்துகொண்ட விக்ரமன், ‘நீங்க என் ஊர்காரர் என்பதால் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். என்ன நீங்க தடுக்காதீங்க. நான் பேசுவதற்கு கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா ’ என கேட்டார்.
இதன்பின் பேசிய ஜிபி முத்து, பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதால் உங்களை தடுத்தேன் எனக்கூறி, தனலட்சுமி அசலிடம் எகிறியது தவறு என பேசினார். ஒரு பொம்பள புள்ள எகிறினால் ஆணுக்கு கோபம் வரத்தான் செய்யும் என்றும், பொண்ணுங்க ஆண்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜிபி முத்து பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அந்த சமயத்தில் கடந்த வாரம் தனலட்சுமிக்கும், தனக்கும் இடையே நடந்த சண்டையை பற்றியும் பேசிய ஜிபி முத்து, தான் மன்னிப்பு கேட்டும் தனலட்சுமி தன்னை மன்னிக்கவில்லை என்று கூறினார். இதுவே எனது மகளாக இருந்திருந்தால் செருப்பாலயே அடிச்சிருப்பேன் என சொன்ன ஜிபி முத்துவிடம் இதெல்லாம் தப்பு, உங்க பொண்ணா இருந்தாலும் செருப்பால அடிக்கக்கூடாது என கூற, ஜிபி முத்து இவைகளை காதில் வாங்கிகொள்ளவில்லை.
அவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் செல்வேன் என சொன்னதற்காக சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது போல் ஜிபி முத்துவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
#GPmuthu Old generation mindset. #Vikraman is progressive mindset. Hope Vikraman change old mindset of GP.Muthu #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/Xwtlu2DMG2
— TV GO (@TV_GO_) October 19, 2022