Viral Video: மேடையில் டான்ஸ் ஆடிய இளைஞர் மீது விழுந்த ராட்சத திரை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ

Giant screen fell down on dancer in hong kong concert

கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர், தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம். இவர்களுக்கென சீனாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சீனாவில் பல நிகழ்ச்சிகளை பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமான கேண்டபாப் மிரர் என்ற நடனக்குழுவினர், ஹாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.

Giant screen fell down on dancer in hong kong concert

அந்நிகழ்ச்சியை பார்க்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். கேண்டபாப் மிரர் குழுவினர் நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக அரங்கில் மேலே தொங்கவிடப்பட்டிருந்த பிரம்மாண்ட வீடியோ ஸ்கிரீன் அறுந்து விழுந்தது.

Giant screen fell down on dancer in hong kong concert

இதில் நடனமாடிக் கொண்டிருந்த கேண்டபாப் மிரர் நடனக்குழுவை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கும் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பிரம்மாண்ட ஸ்கிரீன் அறுந்து நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது விழுந்த பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.

Giant screen fell down on dancer in hong kong concert

இந்த விபத்தின் காரணமாக கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் அடுத்ததாக கலந்துகொள்ள இருந்த 12 நடன நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஹாங்காங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேபிள் அறுந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரம்மாண்ட ஸ்கிரீன் அறுந்து விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

Share this post