படப்பிடிப்பில் கல் எறிந்து தாக்குதல் நடத்திய பொதுமக்கள்.. பரத் பட ஷூட்டிங்கில் பரபரப்பு.. !

General public throws stones on actor bharath shooting spot in thailan

தமிழ் சினிமாவில் 2003ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இதனைத் தொடர்ந்து, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பாராட்டுகளை குவித்து தென்னிந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

இதையடுத்து செல்லமே, எம் மகன், வெயில், நேபாளி, பழனி, சேவல் உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக தற்போது வலம் வருபவர்.

தமிழில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ள இவருக்கு, பட வாய்ப்புகள் குறைய துவங்க தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

General public throws stones on actor bharath shooting spot in thailan

தற்போது அவர் ஆக்ஷன்22 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் கதைக்களம், சில வருடங்களுக்கு தாய்லாந்து குகையில் மாணவர்கள் சிலர் சிக்கிக்கொள்ள, அதன் பின் பல நாட்கள் மீட்பு பணிகள் நடந்த பிறகு தான் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஆக்ஷன் 22 படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதன் உண்மை சம்பவம் நடந்த இடத்திலேயே படத்தின் ஷூட்டிங்கை, நடத்த முடிவெடுத்து அரசு அனுமதியை பெற்று அங்கு சென்று ஷூட்டிங் நடத்தி இருக்கின்றனர் படக்குழுவினர். அப்போது, திடீரென அங்கு வசிக்கும் மக்கள் சிலர் வந்து ரகளை செய்து ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளனர்.

பணம் கொடுத்தால் தான் ஷூட்டிங் நடத்த விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இதையடுத்து, கார்களை கல் எறிந்து தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி இருக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் கேட்டப்பணம் கொடுக்கப்பட்டும் அவர்கள் அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஷூட்டிங் தொடங்க ஏற்பாடு செய்தனர்.

General public throws stones on actor bharath shooting spot in thailan

ஆனால் மழை காரணமாக மீண்டும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்பை ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என அப்படக்குழு முடிவு செய்து இந்தியா திரும்புகிறது.

Share this post