தியேட்டர் வாசல்'ல ஒன்னு.. ட்விட்டர்'ல ஒன்னு.. நெஞ்சுக்கு நீதி படம் பற்றி காயத்ரி ரகுராமின் 2 விதமான பதிவு ! வைரலாகும் வீடியோ

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

பிரபல நடன கலைஞர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா அவர்களின் மகள் காயத்ரி ரகுராம். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா ஜோடியாக சார்லி சாப்ளின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

தமிழில், பரசுராம், ஸ்டைல், விசில், விகடன், வானம், காதலில் சொதப்புவது எப்படி, வை ராஜா வை, இது என்ன மாயம், தாரை தப்பட்டை, அருவம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

இதன் நடுவே, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் இவரது செய்கைகள் பெரிதும் நெகட்டிவ் விமர்சனங்களை இவருக்கு கொண்டு சேர்த்து. இதனால், சமூக வலைத்தளங்களில் இவரை அதிகம் திட்டி தீர்த்தனர்.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

2014ம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். ஜூலை 2020ம் ஆண்டு முதல் ஒரு சில பதவிகளில் வகித்து வருகிறார்.

அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் இவரது பேட்டி அல்லது பதிவு பெரும் பேச்சு பொருளாக மாறுவது வழக்கம்.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

பேரறிவாளன் விடுதலை குறித்து இவர் பதிவிட்ட பதிவு பற்றி பேசி வந்த நிலையில், தற்போது நெஞ்சுக்கு நீதி படம் குறித்து இவர் பதிவிட்ட ட்வீட் செம வைரல் ஆகி வருகிறது.

2019ம் ஆண்டு இந்தியில் ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள்15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

ஆணவக் கொலை, பூமியில் பிறக்கும் அனைத்து உயிர்களும் சமம் போன்ற பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அம்பேத்கர் வரிகள் அதிகம் உள்ளது.

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தை பல்வேரு பிரபலங்கள் பார்த்து இருந்தனர்.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

அந்த வகையில் காயத்ரி ரகுராமும் இந்த படத்தை பார்த்தார். அப்போது தியேட்டர் வாசலில் இந்த படம் குறித்து அவர் பேசிய அவர் ‘ஆயுஷ்மான் குரானா நடிச்ச ஆர்ட்டிக்கள் 15 படம் எனக்கு ரொம்பவே பிடிச்ச படம், அந்த படம் எப்படி தமிழில் வந்திருக்கு என்பதை பார்க்கவே வந்தேன்.

உதயநிதி ஸ்டாலின் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்காரு, நாங்க ரெண்டு பேரும் வேற வேற கட்சியா இருக்கலாம். ஆனால், சினிமா கலைஞரா நான் அவரை பாராட்டுறேன்.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

எல்லோருக்கும் சமநீதி வேணும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடும் என்று கூறினார்.

இறுதியில் அனைவரும் மத பாகுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சொல்லாமல், சாதி பாகுபாடுகளை பார்க்காமல் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் பேட்டியில் கூறி இருந்தார்.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

ஆனால், இந்த படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது ”நெஞ்சுக்கு நீதி படம் பார்த்தேன் இந்த படம் இந்தி ரீமேக் Article 15 ஆக நன்றாக இருந்தது, ஆனால் இளம் பெண்ணின் பலாத்காரத்தின் வலியை விட சாதி ஆதிக்கம் செலுத்தியது.

கற்பழிப்பு தான் உண்மையான வலி. சாதி ஒடுக்கப்படுவதை விட பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாம் ஏன் அதை உணரவில்லை.எங்கோ நான் இந்த படத்தில் பெண்களின் வலி என்னால் உணர முடியவில்லை.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

எதிர்பார்த்தபடி தேவையற்ற 1 அல்லது 2 திணிக்கப்பட்ட சில திராவிட மாடல் உரையாடல்கள் காரணமாக இருக்கலாம்.நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு, பிராமண சகோதர சகோதரிகளின் அவதூறுகளுக்கு எதிராக அனைத்து இந்துக்களும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது.

அனைத்து சாதி இந்து ஒற்றுமைக்காக பிராமணர்களுக்கு மட்டுமின்றி இந்து ஒற்றுமையை காட்டுங்கள்.

இன்று எந்த பிராமணர்களோ எந்த ஜாதியினரோ எந்த அட்டவணை ஜாதியினரையும் தவறாகப் பேசுவதில்லை. இந்த படம் சாதியை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

ஆனால், திமுக உண்மைக்கு கடுமையான மாறான வசனங்களுடன் திரைப்படத்தை ஸ்டிக்கர் ஒட்டி திராவிடமயமாக்குகிறது.

Gayathri raguram about nenjukku needhi movie review in different version getting viral on social media

இது நெஞ்சுக்கு நீதி. பலாத்காரத்தில் சாதி இல்லை அது ஒரு மனிதனின் கொடூரமான மனம். கற்பழிப்புக்கு காரணம் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மட்டும் அல்ல.

கற்பழிப்புக்கு வயது இல்லை.. சிலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். துரதிருஷ்டவசமாக பலர் கற்பழிக்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி பேட்டியில் ஒன்று, சமூக வலைத்தளங்களில் ஒன்று என அவர் பேசியிருப்பதை மக்கள் பேசி வருகின்றனர்.

Share this post