'நீங்கள் இந்தியன் இல்லையா?' சூர்யாவை கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

பிரபல நடன கலைஞர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா அவர்களின் மகள் காயத்ரி ரகுராம். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா ஜோடியாக சார்லி சாப்ளின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

தமிழில், பரசுராம், ஸ்டைல், விசில், விகடன், வானம், காதலில் சொதப்புவது எப்படி, வை ராஜா வை, இது என்ன மாயம், தாரை தப்பட்டை, அருவம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

இதன் நடுவே, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் இவரது செய்கைகள் பெரிதும் நெகட்டிவ் விமர்சனங்களை இவருக்கு கொண்டு சேர்த்து. இதனால், சமூக வலைத்தளங்களில் இவரை அதிகம் திட்டி தீர்த்தனர்.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

2014ம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். ஜூலை 2020ம் ஆண்டு முதல் ஒரு சில பதவிகளில் வகித்து வருகிறார்.

அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் இவரது பேட்டி அல்லது பதிவு பெரும் பேச்சு பொருளாக மாறுவது வழக்கம். இவர் சமீபத்தில் பேரறிவாளன் விடுதலை, உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி குறித்து பேசியது அனைத்தும் செம வைரலாக பேசப்பட்டது.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதை பெரிதும் பாதித்ததாக அமைந்த திரைப்படம் ராக்கெட்ரி. நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை பற்றி படமாக்கப்பட்ட அத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினி கூட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டி இருந்தார்.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

இந்நிலையில் ராக்கெட்ரி படத்தில் சூர்யா நடித்த சீனை வைத்து அவரை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்துள்ளார் தமிழக பா.ஜ.க, நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம். அவர் தனது பேட்டியில், ‘இஸ்ரோ’ விஞ்ஞானியாக பல காலம் பணியாற்றியவர், நம்பி நாராயணன். அவரது தேச பக்தியில் சந்தேகம் ஏற்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. நம்பி நாராயணன், சட்ட ரீதியில் போராடி, அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேச பக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம் தான், ராக்கெட்ரி.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

அந்த படம் பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது. படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன், பேட்டி தரும் காட்சி முடிந்ததும், நம்பி நாராயணன், ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி முடிப்பார். இந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக்கானும் பதிலுக்கு, ‘ஜெய் ஹிந்த்’ என கூறுவார்.

தமிழ் மொழியில், நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால், ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி பேட்டியை முடிக்க மாட்டார். இது என்ன முரண்பாடு என புரியவில்லை. சூர்யாவுக்கு, ‘ஜெய் ஹிந்த்’ பிடிக்கவில்லையா? அல்லது பட காட்சி அமைப்பே அப்படித் தான் எடுக்கப்பட்டுள்ளதா?

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

சூர்யா, ஜெய் ஹிந்த் அதாவது இந்தியா வாழ்க என்ற வார்த்தையை கூற மாட்டார் என்றால், அது என்ன கொச்சை வார்த்தையா? ஒரு வேளை, அவருக்கு இந்தி தெரியாததால், அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ, மறுத்திருந்தாலோ இந்தி மொழியை இலவசமாக கற்று கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். ஜெய் ஹிந்த் என சூர்யா சொல்ல மறுத்தது ஏன் ? ஏன் அவர் இந்தியர் இல்லையா.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்திருந்தால், அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப் பற்று இல்லாதவர், இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடலாம். அதற்கு என்ன தேவையோ, அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். சூர்யா சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

காயத்ரி ரகுராம் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இப்படி ஒரு பேட்டியை அளித்துள்ளார் என சூர்யா ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். ஏதாவது ஒரு படம் வந்து, ஹிட் ஆகி விட்டால் போதும் அந்த படம் பற்றியோ அல்லது அதில் நடித்தவர் பற்றியோ சர்ச்சையாக ஏதாவது ஒன்றை பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வதே பலரின் வேலையாக உள்ளது என நெட்டிசன்கள் கடுப்பாகி காயத்ரி ரகுராமை திட்டி வருகின்றனர்.

Gayathri raghuram tweets about suriya in rocketry movie tweet getting viral on social media

Share this post