21 வயது இளைஞராக தளபதி விஜய் ! யோகன் திரைப்படம் குறித்து GVM சொன்ன செம தகவல் !
காதல் திரைப்படங்கள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.
மின்னலே, வாரணம் ஆயிரம் தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்து இளசுகளின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார்.
சிம்பு, த்ரிஷா, கணேஷ், நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, தற்போது வரை இளசுகளின் பேவரைட் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் 2ம் பாகம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், 10 வருடங்கள் ஆகியும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இப்படத்தின் தொடர்ச்சியாக எடுத்து வெளியிட்டார் கவுதம் மேனன். இதன்பின்னர் பல்வேறு படங்களில் அவர் பிசியானதால் 2ம் பக்கம் குறித்த எந்த பேச்சும் இல்லை.
இந்நிலையில், விஜய்யுடன் பல முக்கிய இயக்குநர்கள் பணிப்புரிந்தாலும், அனைவரும் எதிர்பார்த்த ஒரு கூட்டணி என்றால் விஜய் - கௌதம் மேனன். இவர்கள் கூட்டணியில் யோகன் என்ற திரைப்படம் உருவாகவிருந்தது அனைவரும் அறிவர்.
ஆனால் சில பல காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில், கௌதம் மேனன் அப்படம் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியாதவது “21 வயது இளைஞராக வலம் வரும் விஜய், விமான குண்டு வெடிப்பு, அதில் தனது காதலியை பறிகொடுப்பது போன்றவற்றை சம்மந்தப்படுத்துவதே யோகன் படத்தின் கதை” என கௌதம் மேனன் பேசியுள்ளார்.
மேலும் இப்படத்தின் கதையை கேட்ட விஜய், பின்வரும் காலங்களில் இதுபோன்ற கதையில் நடிக்கிறேன் என்றதால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் மீண்டும் இப்படம் உருவாக வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
GVM reveals the idea of Yohan and it's catchy. He says it's a very international film, set completely abroad, action spy thriller. #Vijay liked the idea, but didn't want to do it at the time. @menongautham would love to pitch this story to him again. pic.twitter.com/CResI0iHLy
— George (@VijayIsMyLife) March 15, 2021