'எறங்கி எதாவது செய்யலாமா'ங்கிற அளவுக்கு கோவம் வருது'.. ப்ளூ சட்டையை கடுமையாக விமர்சித்த கவுதம் மேனன் !
காதல் திரைப்படங்கள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். மின்னலே, வாரணம் ஆயிரம் தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்து இளசுகளின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார்.
வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், நீதானே எந்தன் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். முதல் பாகம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, சிம்பு மற்றும் கவுதம் மேனன் பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அப்படி ஒரு பேட்டியில், ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து கவுதம் மேனன் பேசியுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படம் பற்றி மோசமாக ரிவியூ கொடுத்து, நடிகர் ஒருவரை உருவகேலி செய்தது என இருக்க இதனை சிம்பு மற்றும் கவுதம் மேனன் வன்மையாக கண்டித்துள்ளனர்.
GVM vs BlueSattai 🤜🏼🤛🏼pic.twitter.com/lzR1pqB9HU
— Karthik Ravivarma (@Karthikravivarm) September 20, 2022