கௌதம் - மஞ்சிமா திருமணம் ? கௌதம் கார்த்திக் வெளியிட்ட தகவல்.. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

Gautham karthik and manjima mohan to get married soon information getting viral on social media

பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கவுதம் கார்த்திக், கடல் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் செம ஹிட் ஆனது.

Gautham karthik and manjima mohan to get married soon information getting viral on social media

மேலும், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது 2 படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், தேவராட்டம் என்னும் படத்தில் மஞ்சிமா மோகன் அவர்களுடன் ஜோடியாக நடித்தார்.

Gautham karthik and manjima mohan to get married soon information getting viral on social media

ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், காலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Gautham karthik and manjima mohan to get married soon information getting viral on social media

இந்நிலையில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி தீயாக பரவி வருகிறது.

Gautham karthik and manjima mohan to get married soon information getting viral on social media

இதுகுறித்து, இருவரும் அமைதி காத்து வந்த நிலையில், மஞ்சிமா மோகன் பிறந்தநாளை முன்னிட்டு, கெளதம் கார்த்திக் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்த பதிவு வைத்து இருவரும் காதலிப்பது குறித்த சந்தேகம் அதிகமானது.

Gautham karthik and manjima mohan to get married soon information getting viral on social media

தற்போது, நடிகர் சிம்புவின் பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி வந்தார் கவுதம் கார்த்திக். இதில் ரசிகர்களில் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி கேட்ட போது, சீக்கிரம் என பதில் கூறியுள்ளார். இதனால், இருவீட்டிலும் ஓகே சொல்லிட்டாங்களா, கல்யாணம் கன்பார்ம்’ஆ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post