மீண்டும் டீச்சராக சாய் பல்லவி.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள்.. சூர்யா வெளியிட்ட கார்கி பட ட்ரைலர் !
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாரி 2, NGK போன்ற திரைப்படங்களிலும், மலையாள மொழியில் ப்ரேமம், காளி, அதிரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னரே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, சமீபத்தில் ‘விராடபர்வம்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் காளி வெங்கட், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி. இத்திரைப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. கோவிந்த் வசந்த் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டீச்சராக பணிபுரியும் சாய் பல்லவியின் தந்தை வாட்ச்மேனாக உள்ளார்.
இவரை போலீசார் காரணம் ஏதும் சொல்லாமல் கைது செய்து கொண்டு செல்கின்றனர். இதனால் சாய்பல்லவியை சமூகமும் ஊடகங்களும் மிகவும் மோசமாக நடத்துகிறது. இருந்தும் தளராத கார்கி தந்தைக்காக போராடும் காட்சிகள் உள்ளன.