'உங்க பாகுபலி, பரதேசி புலி தெலுங்கு படமெல்லாம் இங்க ரிலீஸ் ஆகுது?' வாரிசு பட சர்ச்சையில் கொந்தளித்த நடிகர் கஞ்சா கருப்பு

ganja karuppu responds for varisu release issue in andhra pradesh

தமிழ் திரையுலகில், பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. இதனைத் தொடர்ந்து, ராம், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள், களவாணி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவரது கதாபத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டது.

ganja karuppu responds for varisu release issue in andhra pradesh

25திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் இவரது சில பேச்சுக்கள் செம வைரலாகி பிரபலமாக பேசப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா கருப்பை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்க்காமல் மிகுந்த கவலையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கஞ்சா கருப்பு நடிக்க தொடங்கியுள்ளார்.

ganja karuppu responds for varisu release issue in andhra pradesh

இந்நிலையில், தளபதி விஜய் நடித்து வரும் வாரிசுவின் தெலுங்கு வெர்ஷன் திரைப்படத்தினை தெலுங்கில் பண்டிகை நாளை முன்னிட்டு தமிழ்ப்படங்களை வெளியிட கூடாது என்பதால் படத்திற்கு ரிலீஸ் தேதி ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வாரிசு பொங்கலுக்கு வெளியாகுமா என்பதில் பெரும் சிக்கல் உள்ளது.

ganja karuppu responds for varisu release issue in andhra pradesh

இது தமிழில் பெரும் கலவரத்தினை சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, உங்க படம் பாகுபலி, பரதேசி புலி மட்டும் இங்க வெளியாகுது, எங்க படத்துக்கு தியேட்டர் இல்லைனு சொல்லுறீங்க, அப்படியல்லாம் பேசக்கூடாது. உங்க படம் மட்டும் தமிழகத்தில் ஓடி காசு பார்க்கலாம் எங்க படம் தெலுங்கில் ஓடக்கூடாதா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

Share this post