பிகில் படத்துல இந்த ரோல்'ல கேபியா ? நீண்ட நாள் கழித்து அவரே வெளியிட்ட உண்மை தகவல் !

Gabriella charlton called for bigil movie role which was missed by her

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியின் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரியல்லா. இதனைத் தொடர்ந்து, தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார்.

மேலும், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான 7ம் வகுப்பு C பிரிவு சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவர், இதன் மூலம் கிடைத்த பிரபல மூலம் வளர்ந்து வரும் நடிகையாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தனது தனித்துவத்தை காட்டும் விதமாக பங்கேற்றார்.

Gabriella charlton called for bigil movie role which was missed by her

விஜய் தொலைக்காட்சியின் தத்து பிள்ளை என்றே சொல்ல கூடிய அளவிற்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தற்போது, ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் கேபி, சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மேலும், பிரபல நடிகைகளுக்கு போட்டியாக தனது ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது, இவர் பிகில் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘பாலா சாரின் தார தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அதில் நடிக்க வேண்டும் என ஆசை, அவர் படம்னா நடிக்க வேண்டாம் ஒரிஜினாலா இருந்தாலே போதும், அதுதான் எனக்கு ஆசை. ஆனால் சில பல காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.

மீண்டும் அட்லீ சார் இயக்கத்தில் விஜய் சார் நடித்த பிகில் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, படிப்பு தான் முக்கியம் என அந்த வாய்ப்பையும் தட்டிக் கழித்து விட்டேன்’ என கூறினார்.

Gabriella charlton called for bigil movie role which was missed by her

எல்லாரும் விஜய் கூட ஒரு போட்டோ எடுக்க மாட்டோமா என ஏங்கும் நிலையில், அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்தது தனது நெருங்கிய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என அவர் கூறினார்.

பிகில் படத்தில் football பயிற்சியாளராக விஜய் நடித்திருப்பார். அதில், football விளையாடும் அணியில் அம்ரிதா ஐயர், இந்துஜா, இந்திரஜா, வர்ஷா பொல்லம்மா, காயத்ரி மற்றும் பலர் நடித்திருந்தனர். அதில் ஒருகதாபாத்திரத்திற்கு இவரை அழைத்த நிலையில், அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார் கேபி.

Share this post