ஹெல்மெட் போட்டு வந்தா பெட்ரோல் இலவசம்.. தளபதி விஜயால் கிடைத்த அதிரடி ஆஃபர்.. அலைமோதிய கூட்டம்

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இதன் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது 48வது பிறந்த நாளுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த வாரம் முழுக்க நலத்திட்ட உதவிகளை வழங்க நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக பெட்ரோல் வழங்கி உள்ளனர்.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

மயிலாடுதுறை சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணி சார்பாக ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

முதலாவதாக வந்த 100 பேருக்கு மட்டுமே இந்த இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடப்பட்டது. இந்த செய்தி அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்புகளையும் வழங்கினர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Free petrol for thalapathy vijay birthday whoever wears helmet

Share this post