சிக்ஸர் மன்னன், ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் Biopic.. ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

former-cricketer-yuvraj-singhs-bio-pic-to-start-its-shooting-soon

இந்திய அணியின் ஆல் ரவுண்டராகவும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் யுவராஜ் சிங். இந்திய அணியின் பல வெற்றிப் போட்டிகளில் இவரின் பங்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது என்று சொல்லலாம். இந்நிலையில், புற்றுநோயிலிருந்து பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங்கின் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டீ சீரிஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம் எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கரின் பயோபிக்கள் திரைப்படமாக வெளியாகியுள்ள நிலையில், யுவராஜ் சிங்கின் பயோபிக் கண்டிப்பாக ரசிகர்களை அட்ராக்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

former-cricketer-yuvraj-singhs-bio-pic-to-start-its-shooting-soon

முன்னதாக, யுவராஜ் சிங்கின் பயோபிக்கில் ஜெயம் ரவியை, யுவராஜ் சிங் கதாபாத்திரல் நடிக்க வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், கதாபாத்திரம் தேர்வு குறித்து படக்குழு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Share this post