Viral Video: “டான் கதைய Reject பண்ணிட்டேன்".. விழாவில் சீக்ரெட்டை சொன்ன பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ !

First choice for don movie hero reveals the truth

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

First choice for don movie hero reveals the truth

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

First choice for don movie hero reveals the truth

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில், SK20 நடித்து வருகிறார். அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

First choice for don movie hero reveals the truth

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

First choice for don movie hero reveals the truth

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

First choice for don movie hero reveals the truth

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் ஜூன் 10ம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

First choice for don movie hero reveals the truth

வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போதும் சில திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

First choice for don movie hero reveals the truth

இந்நிலையில், டான் திரைப்படத்தின் 25வது நாளை முன்னிட்டு வெற்றிவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக லைகா சுபாஷ்கரன் லண்டனில் இருந்து சென்னைக்கு வந்திர்ந்தார். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் பேசிய நிலையில், விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

First choice for don movie hero reveals the truth

அதில் ‘டான் கதை முதலில் என்னிடம்தான் வந்தது. நான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன். கதை எனக்குப் பிடித்தது. ஆனால் கதையில் வரும் ஸ்கூல் பையன் வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. அதனால்தான் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நல்ல வேலை அது சிவாவிடம் சென்றுள்ளது. யார் யார் எத பண்ணனுமோ அது அமைஞ்சிருக்கு. சிபி என்கிட்ட இருந்து நீங்க எஸ்கேப் ஆகி இருக்கீங்க. ” என்று கலகலப்பாக பேசினார்.

Share this post