பிக்பாஸின் ஏடாகூடமான கேள்வியால் ஜனனி - ஏடிகே இடையே வெடித்த சண்டை.. வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசனில் கலந்துகொண்ட இலங்கைய சேர்ந்த போட்டியாளர்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் மிகவும் பிரபலம் ஆகினர். இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் இருவர் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஏடிகே மற்றும் ஜனனி.
இதில் ஏடிகே பாடகராகவும், ஜனனி செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தவர்கள் ஆவர். அண்ணன், தங்கை போல் பழகி வந்த இவர்களிடையே சண்டையை மூட்டி விட்டுள்ளார் பிக்பாஸ். பிக்பாஸில் வாரந்தோறும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில், இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர் ஒருவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பிக்பாஸ் கேள்வி ஒன்றை கேட்பார். அதே கேள்வி வெளியில் அமர்ந்திருக்கும் மற்ற போட்டியாளர்களிடமும் கேட்கப்படும்.
அதில் கன்பெஷன் ரூமில் இருக்கும் போட்டியாளர் அளிக்கும் பதிலும் வெளியே உள்ள போட்டியாளர்கள் அளிக்கும் பதிலும் ஒத்துப்போனால் அந்த போட்டியாளருக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். அவ்வாறு ஜனனியை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து, இந்த வீட்டில் நல்லவர் என்கிற முகமுடியுடன் இருக்கும் போட்டியாளர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஜனனி, ஏடிகே என பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு ஷாக் ஆன ஏடிகே, உன்னை தங்கை என நினைத்து பழகியது தவறா என கேட்டு அவருடன் சண்டையிட்டுள்ளார். அதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.
#Day32 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/MhG6BAzgft
— Vijay Television (@vijaytelevision) November 10, 2022