தனலட்சுமி சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தையால்.. கண் கலங்கி அழுத ஜிபி முத்து.. உணர்ச்சிவசப்பட ஆர்மியினர் !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்போது, இதில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுப்பட்டு வருகிறது. தற்போது, ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளர் என்றால் அது ஜிபி முத்து தான். அவருக்கென ஆர்மி தொடங்கி, ட்விட்டரில் டிரெண்டாகும் அளவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் தற்போது அவரையே அழ வைத்துள்ளார் பொதுமக்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள தனலட்சுமி.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜிபி முத்து, ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் உள்ள ஆயிஷா, ஜனனியால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டின் வெளியில் உள்ள வாழைப்பழ பெட்டில் தான் தூங்க வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட்டார்.
இதையடுத்து நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ஆயிஷா, ஜிபி முத்துவை நாமினேட் செய்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம், ஜிபி முத்து பிற அணியினருக்கும் வேலை செய்கிறார் என்பது தான். இதனால் கடுப்பான ஜிபி முத்து வெளியில் அமர்ந்து சக ஆண் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜனனியும், ஆயிஷாவும், அவரிடம் பேச முற்படும் போது, தயவு செஞ்சி நீங்க பிறகு வாங்க என சொன்னார்.
உடனே தனலட்சுமி, அவர் எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறாரு என சொல்ல, அவர்கள் இருவரும் தான் மன்னிப்பு கேட்ட பின்னரும் முறைத்ததாக கூறினார் ஜிபி முத்து. பின்னர் நாங்கள் முறைக்கவே இல்லை என வாக்குவாதம் செய்த தனலட்சுமி, ரொம்ப நடிக்காதீங்க என சொன்னதும், செம்ம டென்ஷன் ஆன ஜிபி முத்து, நான் நடிக்கிறேன்னு நீ பாத்தியா என கேட்க வாக்குவாதம் முற்றியது.
பின்னர் டைனிங் ஏரியாவில் அமர்ந்திருந்த போது இதை நினைத்து கண்கலங்கி அழுதார் ஜிபி முத்து. இதைப்பார்த்த சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவியதை அடுத்து, தலைவரே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம் என சமூக வலைதளங்களில் ஜிபி முத்துவுக்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி உள்ளே ஒரு இடத்தில் நிவாஷினி உடன் பேசுகையில், ஜிபி முத்தா, அந்த ஆளு ஒரு லூசு என கூறி உள்ளார் தனலட்சுமி. அந்த வீடியோவை பகிர்ந்து யார் லூசுனு கமல் சார் வர்றப்ப தெரியும் என ஜிபி முத்து ஆர்மியினர் கூறி வருகின்றனர்.
😡😡😡#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/y2lNtmCsPr
— GP MUTHU ARMY (@drkuttysiva) October 12, 2022
So sad....Don't worry Thalaiva...
— GP MUTHU ARMY (@Orathi_Official) October 12, 2022
People will be watching everything 😭 Be strong.💪💪💪#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 pic.twitter.com/JE50gOkAen
#Dhanalakshmi ku ellarum lusu than pola avangla thavira 🙄
— BarbieGal☔ (@VenusMinerva21) October 12, 2022
1st #Maheshwari ( but Maheswari said D the same)
Now #GPMuthu 😴😴pic.twitter.com/eRioiQ8piM#BiggBossTamil6#BiggBossTamil