இப்படி மொத்தமா போட்டு ஒடச்சிட்டிங்களே மணி சார்.. பொன்னியின் செல்வன் 2 ப்ரமோவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். வசூலையும், பாசிட்டிவ் ரிவ்யூக்களையும் அள்ளி குவித்து வரும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்புடன் வெளியான புதிய ப்ரமோவை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இரண்டாம் பாகத்தின் முக்கிய ட்விஸ்ட் காட்சியையே தற்போது ப்ரமோவில் ரிவீல் செய்து சொதப்பிவிட்டார் இயக்குநர் மணிரத்னம் என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வந்தியத்தேவன் (கார்த்தி) இருவரும் கடலில் மூழ்கி இறந்து போனதாக ட்விஸ்ட் வைத்து முடித்திருப்பார்கள். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிப்புடன் வெளியாகி உள்ள புதிய ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
டீஸரிலேயே ஜெயம் ரவியை காட்டிட்டீங்களே பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்கிற ஒற்றைக் கேள்வியை மையமாக வைத்து பாகுபலி 2 படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக இயக்குநர் ராஜமெளலி மாற்றி இருந்தார். ராஜமெளலியின் பாகுபலி 2 பார்முலாவை கையில் எடுத்த உங்களுக்கு பில்டப்பே கொடுக்க தெரியவில்லை. எடுத்ததுமே ஜெயம் ரவியை ஏன் காட்டினீர்கள் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
புக் படிச்சவங்களுக்கு அருள்மொழி வர்மன் மரணிக்க மாட்டார் என்கிற கதை தெரியும். ஆனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்காமல் முதல் முறையாக படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த கடைசி கிளைமேக்ஸை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், இப்படி சல்லி சல்லியா ப்ரமோவிலேயே கார்த்தி மற்றும் ஜெயம் ரவியை காட்டிட்டீங்களே மணி சார் என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டைட்டில் ரோலே அவர் தான் பொன்னியின் செல்வன் என்கிற டைட்டில் ரோலே ஜெயம் ரவி தான். அவர் எப்படி மரணிப்பார். அது கூட ஒரு ட்விஸ்ட் என ரசிகர்களுக்கு தெரியாதா? என்றும் ஏற்கனவே முதல் பாக டிரைலரிலேயே இரண்டாம் பாகத்தில் கடைசியாக மணிமுடி சூடும் காட்சி வரை இயக்குநர் மணிரத்னம் அப்பவே காட்டியிருப்பார் என மணிரத்னம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் சப்போர்ட் செய்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூலை அள்ளிக் கொடுத்த நிலையில், அதன் 2ம் பாகம், தமிழ் சினிமாவில் முதல் முறையாக 1000 கோடி வசூலை எட்டிய படமாக பொன்னியின் செல்வன் மாறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.