‘World Cupஐ ஜெயிச்சதுக்கு நன்றி.. ஹிப் ஹாப் ஆதிக்கு ஷாக் கொடுத்த ரசிகர்..!(video)
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் பின்னர், மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த PT சார் மற்றும் இசையில் உருவான அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்களும் வெற்றி அடைந்தது. இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா என நினைத்து ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
தன்னை ரோஹித் சர்மா என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் நான் ரோகித் சர்மா இல்லை என ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளர் என அவர் கூறிவிட்டு செல்வதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போது, இணையதளத்தில் அந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.