தமிழில் ரீமேக் ஆகும் 'Hridayam'.. அந்த 'Onakka Munthiri..' பாட்ட மட்டும் மிஸ் பண்ணிராதீங்க ப்ளீஸ் !

Fans favourite hridayam movie to remake in telungu, tamil and hindi languages soon

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலின் மகன் பிரணவ் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ஹிரிதயம் (hridayam). கடந்த ஜனவரி மாதம் வெளியாகி இன்றும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. வினித் சீனிவாசன் இயக்கிய இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி மாதம் வெளியானது.

மெர்ரிலன்ட் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக விகாஷ் சுப்ரமணியம் மற்றும் நோபல் பாபு தாமஸ் தனது பிக் பேங் என்டர்டைன்மெண்ட்ஸ் மூலம் இணைந்து தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ஆசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Fans favourite hridayam movie to remake in telungu, tamil and hindi languages soon

பிரணவ் மோகன்லால் ஜோடியாக கல்யாணி பிரயதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளனர். ஹிஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானே இப்படத்தில் இடம்பெற்ற ஒனக்க முந்திரி, பொட்டு தொட்ட பௌர்ணமி, நகுமோ போன்ற பாடல்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனம் பாக்ஃஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைத்து ஹ்ரிதயம் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது.

Fans favourite hridayam movie to remake in telungu, tamil and hindi languages soon

மேலும் ஒரு அறிக்கையில் “ரீமேக் உரிமையை வழங்கிய தயாரிப்பாளர் விகாஷ் சுப்ரமணியத்திற்கு நன்றி, ஹ்ரிதயம் படத்தை ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எடுக்க உள்ளோம். மற்ற நடிகர் நடிகைகள் டெக்னிசியன்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வரும்” என அறிவித்துள்ளனர்.

Share this post