நயன்தாரா மேல் செம கடுப்பில் மதுரை ரசிகர்கள்.. சொல்றது ஒன்னு செய்றது ஒன்னா..?

fans disappointed on nayanthara due to her activities for promotion

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக புகழும் வரவேற்பும் கொண்ட இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனெக்ட். விக்னேஷ் சிவன் - நயன்தாரா அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

fans disappointed on nayanthara due to her activities for promotion

ஹாரர் ஜானரில் உருவான இத்திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா சில பேட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

fans disappointed on nayanthara due to her activities for promotion

இந்நிலையில், கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா மதுரை வருவதாக தகவல் வெளியானதை அடுத்து, மதுரை வாழ் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இதனையடுத்து, திடீரென, நயன்தாரா வரவில்லை என மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மதுரை ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஏமாற்றம் அடைந்து கடுப்பில் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Share this post