கொல்கத்தாவில் கமல்ஹாசனுக்கு கோவில்.. திறப்பு விழாவிற்கு உலகநாயகனை அழைத்த ரசிகர்கள்!

Fans built temple for kamal haasan in kolkata

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன்.

Fans built temple for kamal haasan in kolkata

தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

Fans built temple for kamal haasan in kolkata

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.

Fans built temple for kamal haasan in kolkata

4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம்.

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Fans built temple for kamal haasan in kolkata

இந்நிலையில், இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக இயக்கி வருகிறார். மேலும், சிவகார்த்திகேயன் அவர்களின் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

Fans built temple for kamal haasan in kolkata

அமிதாப் பச்சன் மீது தங்கள் அன்பையும் மரியாதையையும் காட்டும் வகையில், கொல்கத்தா மக்கள் ஏற்கனவே அவருக்காக கோவில் கட்டியுள்ளனர். தற்போது, ​​உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அங்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் கிதிர்பூர் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் குழு கமல்ஹாசனுக்குக் கோயில் கட்டத் துவங்கியுள்ளனர்.

Fans built temple for kamal haasan in kolkata

கோவிலின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், கோவிலை திறந்து வைக்குமாறு கமல்ஹாசனுக்கு ரசிகர் மன்றம் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு துர்கா பூஜையின் போது கோயில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post