"தெறி" ரீமேக் வேண்டாம்.. என் சாவுக்கு காரணம்..' தற்கொலை கடிதம் எழுதிய ரசிகை.. வைரலாகும் கடிதம்!
2016ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா, மஹேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் பெற்றது.
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் புது படம் குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என ஹரிஷ் ஷங்கர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். அதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்களோ, தெறி படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என்கிற முடிவுக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கிவிட்டனர். தெறி படத்தை ரீமேக் செய்வதை எதிர்த்து பவன் கல்யாணின் ரசிகையான திவ்ய ஸ்ரீ எழுதிய தற்கொலை கடிதம் வைரலாகிவிட்டது.
அந்த கடிதத்தில் திவ்ய ஸ்ரீ கூறியிருப்பதாவது, நான் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியது இல்லை. அப்படி இருக்கும்போது தற்கொலை கடிதம் எழுதுவேன் என கனவிலும் நினைத்தது இல்லை சார். தெறி படத்தின் ரீமேக் என்று எனக்கு தெரிய வந்ததால் இந்த கடிதத்தை எழுத வேண்டியிருக்கிறது என்றார். திவ்யா தன் கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது, என் சாவை பார்த்த பிறகாவது தெறி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை கைவிடுவார்கள் என்று நம்புகிறேன். ஏற்கனவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு நேரத்தில் டிவியில் தெறி படம் ஒளிபரப்பாகி வருகிறது. தயவு செய்து இந்த படத்தை கைவிடுங்கள் சார்.
என் சாவுக்கு காரணம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் குழு, இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ஆகியோர் தான். ரசிகர்களின் உணர்ச்சியுடன் விளையாடாதீர்கள் பவன் கல்யாண் என்றார். திவ்ய ஸ்ரீ எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வந்துவிட்டது. அதை பலரும் ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள். தெறி படத்தை ரீமேக் செய்யக் கூடாது என்று ஹரிஷ் ஷங்கரை பவன் கல்யாண் ரசிகர்கள் விளாசுவதுடன், கிண்டலும் செய்து கொண்டிருக்கிறார்கள். பவன் கல்யாண் ரீமேக்குகளில் அல்ல மாறாக ஒரிஜினல் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் ஆகும்.
மேலும் பவன் கல்யாணுக்கு ரீமேக்குகள் ஒன்றும் புதிது அல்ல. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீம்லா நாயக் படம் அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் ஆகும். மேலும் பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்திலும் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@PawanKalyan @harish2you This scene from #Theri looks like a rotten copy of your #GabbarSingh
— Vaali (@vaaalisugreeva) December 8, 2022
The film is already available in Telugu as #Polisodu
Hope you don’t remake it. #StopTheriRemake #PawanKalyan pic.twitter.com/vWguaBZ4lM