அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போல மாறிய ரசிகர்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ !

Fan get up as vikram kamal haasan video getting viral

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Fan get up as vikram kamal haasan video getting viral

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இருந்து கடந்த வாரம் ரிலீசான ‘பத்தல பத்தல’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில், விக்ரம் படத்தில் வரும் கமலை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருந்தது போல் மேக்கப் போட்ட ரசிகர் ஒருவரின் வீடியோ ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.

Share this post